Mnadu News

அடுத்தடுத்து வெளியாகும் சந்தானத்தின் படங்கள்!

“டிடி ரிடர்ன்ஸ்” கொடுத்த பிரம்மாண்ட வெற்றி சந்தானத்தை கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம், சுமார் 30 கோடிகள் வரை இந்த திரைப்படம் வசூலை ஈட்டி சந்தனதானத்தின் பயணத்தை தாங்கி பிடித்துள்ளது. பல வருடங்களாக சரியான வெற்றியை பதிவு செய்யாத சந்தானம் “டிடி ரிடர்ன்ஸ்” மூலம் ஸ்ட்ராங் கம் பேக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சந்தானத்தின் படங்கள் வரிசை கட்ட உள்ளன. தற்போது, பிரபல கன்னட இயக்குனரான பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான “லல் குரு”, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற பல பிளாக் பஸ்டர் இயக்குனர் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் படம் “கிக்”.

சந்தானம், தன்யா ஹோப் முன்னணி ரோல்களில் நடிக்க, தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் மூலம் இவரும் தமிழில் அறிமுகமாகிறார்.

 பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் “கிக்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஜனவரி மாதம் வெளியான “கிக்” பட டிரெய்லர் கவனம் ஈர்த்த நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி கிக் ரிலீஸ் ஆக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 

Share this post with your friends