கர்நாடகாவில் ,தும்கூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அசாம் முதல் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்தத் தும்கூர் தொகுதியில் 342 கிராமங்கள் உள்ளன. இந்த தொகுதியில் காங்கிரஸின் ஊழல் மற்றும் திறமையின்மையால்;, பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் மற்றும் சாலை வசதி இல்லை.எனவே இந்த நிலையை மாற்ற விரும்புகிறோம். அதனால்தான் இந்த தொகுதியில்; மக்களுக்கு சேவை செய்ய துடிப்புடன் உள்ள சிறந்த வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். இதற்கு மேலும் காங்கிரஸால் இனி எதுவும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்பதை யாரும் மனதில் கொள்ள வேண்டாம்.அடுத்த 100 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More