அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான தினேஷை படப்பிடிப்பின் போது கமாண்டோ படையினர் சுற்றி வளைத்தனர். இதனால் படக்குழுவில் பதற்றம் ஏற்பட்டது .
அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் படங்கள் என்றாலே சமுதாய பார்வையில் ஒரு வித்யாசமான படைப்பாக இருக்கும். தினேஷ் நடித்த வந்த படங்களான அட்டகத்தி, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றைஅழுத்தவும், விசாரணை, அண்ணனுக்கு ஜெய் போன்ற பல படங்கள் ரசிகர்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் , விருதுகளையும் பெற்றது .
அதிலும் விசாரணை படத்தின் மூலம் தினேஷ் நடிப்பிற்கு ஒரு புதிய பரிணாமம் கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பையையும் , நல்ல கதைகளை இவர் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் . இவரது அடுத்த படமாக வெளி வர இருக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது .
படத்தில் வர இருக்கும் ஒரு காட்சியான லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் லாரியின் உள்ளே இருந்து படமாக்கிக் கொண்டிருந்தனர். படத்தளத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை பார்த்த கமாண்டோ படையினர் உண்மையான துப்பாக்கி என்று நினைத்து நடிகர் தினேஷை சுற்றி வளைத்தனர் .
அப்போது அருகிலிருந்த படக்குழுவினர்கள் பதறி அடித்து கொண்டு ஷூட்டிங் என்று கூறியவுடனும், தினேஷை பார்த்துவிட்டு இது படப்பிடிப்பு என்று உறுதிப் படுத்திக் கொண்ட கமாண்டோ படையினர் அங்கிருந்து சென்றனர் .