நேற்று நடந்த ஐ பி எல் போட்டியில் கொல்கத்தா அணியும் சென்னை அணியும் மோதிக்கொண்டன . முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.முதலாவதாக வந்த கிறிஸிளின் அபாரமாக ஆடி 6 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். அதன் பின் கிறிஸிளின் முக்கிய விக்கெட்டை தாஹிர் மிகவும் தந்திரமாக எடுத்தார் . இதே போல் தாஹிர் போட்ட அணைத்து பந்துகளையும் கொல்கத்தா அணி வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
அற்புதமாக அணைத்து பந்துகளையும் போட்ட தாஹிர் இந்த போட்டியில் மட்டும் 27 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டை எடுத்து அசத்தினார் . பின் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க . 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது .
அபாரமாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். தாகுர் அவர் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை சான்டனர் 1 விக்கெட்டையும் எடுத்தார் .
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது .வாட்சன் 6 ரங்களுடன் வெளியேற d பிளெஸ்ஸிஸ் 24 ரங்களுடன் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனவைரும் அடுத்தடுத்து அவுட் ஆகா கெதர் ஜாதவ் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க தோனியும் 16 ரன்களில் அவுட்டானார் .
ரெய்னா மற்றும் ஜடேஜா ஜோடிகள் பொறுமையாக அணிக்கு வெற்றி ரன்களை சேர்த்தனர் . அபாரமாக விளையாடிய ரெய்னா தனது 36 ஆவது அரைசதத்தை பதிவுசெய்தார் . ஜடேஜாவும் அவர் பங்கிற்கு 31 ரன்களை எடுத்தார் . கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரெய்னா மற்றும் ஜடேஜா 19 . 4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து சென்னை அணியின் 7 ஆவது வெற்றியை பதிவு செய்தனர் .
அபாரமாக ஆடிய ரெய்னா , ஜடேஜா மற்றும் கொல்கத்தா வீரர்களை பந்துவீச்சில் திணறடித்த இம்ரான் தாஹிர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர் .