பங்குகளின் விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் பங்கு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் குற்றம்சாட்டியது. இதனால் அதானி பங்குகள் கடுமையாக சரிந்தன.இந்த விவகாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத காலம் அவகாசம் வழங்குவது என்பது தற்போதைய சூழலில் முடியாத ஒன்று என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More