ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2020-21 நிதி ஆண்டில் 87 ஆயிரத்து 977 கோடி ரூபாய் கடன் வாங்கிய தமிழ்நாடு, 2021-22-இல் 87 ஆயிரம் கோடி கடன் வாங்கியது.அதோடு, 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது.கடந்த இரண்டு நிதி ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழகம் வாங்கிய கடன் சற்றே குறைந்துள்ளது. அதேநேரத்தில், நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழகம் கடன் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More