பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானத்தில் செல்வதால், விமானக் கட்டணம் கிடு கிடு; என உயர்ந்துள்ளது.தீபாவளி விடுமுறைக்கு வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால்,வட மாநிலங்களுக்கு செல்லும் பயணத்திற்கான விமானக் கட்டணமும் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு டிக்கெட் கட்டணம் 11ஆயிரத்து 800 ரூபாய் ஆக இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு 11 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கோவைக்கு 10 ஆயிரத்து 500 ரூபாயாகவும் கட்டணமாக உள்ளது.
சென்னையில் இருந்து கொச்சிக்கு 9 ஆயிரம் ரூபாயாகவும், சென்னனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.21 ஆயிரம் ரூபாய் வரையும், சென்னனையில் இருந்து கொல்கத்தாவிற்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரையும், சென்னனையில் இருந்து புது டெல்லிக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக உள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More