நடிப்பது, பாடுவது, நடம் ஆடுவது என அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய திறமை தான் அதிதி ஷங்கர். இவர் அறிமுகமான “விருமன்” திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இவரின் நடிப்பு, நடனம் பெரிதும் பேசப்பட்டது. மேலும், இவர் யுவனுடன் இணைந்து பாடிய “மதுர வீரன்” பாடல் வைரல் ஹிட் ஆனது.
தற்போது, மாவீரன், படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருது இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், என பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். இவர் செர்ஷா என்ற ஹிந்தி படத்தை சமீபத்தில் வெளியாகி பெரிய கவனத்தை ஈர்த்தது.
தற்போது, அந்த படத்தை தமிழில் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிதி ஷங்கரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.