அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து கடந்த கடந்த 2022 ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது.இந்த நிலையில், அடுத்த கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More