Mnadu News

அதிமுக பெரியகுளம் வேட்பாளர் திடீர் மாற்றம்

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் முருகனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்தில் முருகன் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் கண்டிப்பாக பெரியகுளம் தொகுதிக்கு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே மாதிரி இன்றைக்கு பெரிய குளம் வேட்பாளராக எம்.மயில்வேல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் மாற்றப்பற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this post with your friends