அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றும் உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்ட போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகக் கூறிய நீதிபதிகள், அதற்குள், எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை இரு தரப்பும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More