Mnadu News

அனபெல் 3 படத்தின் டைட்டில் வெளியீடு

பேய்ப் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழகத்தில் பொறுத்தவரையில் கடவுளை மையமாக வைத்து பேய்ப் படங்கள் எடுக்கப்பட்டன.

பின் இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நாங்களும் உலக சினிமாவை நோக்கிப் பயணப்படுகிறோம் என்ற வகையில் பிசாசு போன்ற படங்கள் வெளியாகின.

இந்நிலையில் உலகம் முழுக்க வெளிவந்து வசூலில் வேட்டையாடிய அனபெல் படத்தின் மூன்றாம் பாகத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

Comes Home என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படம் ஜூன் 28ம் தேதி வெளியாக உள்ளது. அனபெல் ஃபேன்ஸ்லாம் ட்ரெய்லருக்காக காத்திருக்கிறார்கள்.

Share this post with your friends