மின்சார கார் நிறுவனமான டெஸ்லா கடந்த காலாண்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த வருமானத்தையே பெற்றுள்ளது. போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா கார்களில் விலையையும் குறைத்து வருகிறது.இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு நிறுவனத்; தலைவர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்க அனுமதி வேண்டுமென நிர்வாகத்தினர் எனக்கு மெயில் அனுப்புகின்றனர். ஆனால், என் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் யாரும் சேர்க்கக்கூடாது. எனது அனுமதி மெயில் இல்லாமல் டெஸ்லாவில் ஒரு காண்டிராக்டர் கூட சேர்க்கக்கூடாது’ என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.
அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...
Read More