காஞ்சிபுரம் மத்திய அமைச்சர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனையடுத்து வெள்ளை கேட் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,நீட் தேர்வு தேசத்தின் பொதுவான நுழைவுத்தேர்வு, இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும என்றார்;. அனைத்து படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்த அரசு யோசித்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More