தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுன்னத் ஜமாத் ஜும்ஆ பள்ளிவாசலில், மத வேற்றுமையைக் கடந்து அக்கிராமத்தைச் சேர்ந்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சிறப்பு தொழுகை முடிந்த சில நிமிடங்களிலேயே அரியநாயகிபுரம் உட்பட விளாத்திகுளத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மழைக்காக காத்திருந்த விவசாயிகள் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More