Mnadu News

அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க மத்திய அரசு உறுதி.

மத்திய பிரதேசத்தில்;பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 லட்சத்து 51 ஆயிரம் வீடுகளை பயனாளிகளிடம் கணொலி காட்சி; முறையில் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.அதைத் தொடர்ந்து பேசிய அவர் , இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் காஸ் இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். பயனாளிகளின் கனவை நிறைவேற்றுவதற்கு பலம் சேர்க்கும். நாட்டில் சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதற்கான முக்கிய ஊடகமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மாறியுள்ளது என்றார்.
கடந்த 8 ஆண்டுகளில் 3 கோடியே 50 லட்சம் கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. வீட்டு வசதி வாரியங்களுக்கு கட்டடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு 22 ஆயிரம் கோடி ருபாயை தாண்டியுள்ளது. நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று மோடி பேசினார்.

.

Share this post with your friends