Mnadu News

அப்துல் கலாம் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு அஞ்சலிகள். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த குடியரசுத் தலைவராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பெரிதும் போற்றப்படுகிறார். இந்திய ஏவுகணைகளின் வளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் கலாம். பல்வேறு துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ ஆகிய இந்தியாவின் இரண்டு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார் என்று பதிவிட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய பணிக்காக 11வது குடியரசுத் தலைவரான கலாமுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலாம் கடந்த  2015 ஆண்டு ஜூலை மாதம்  27ஆம் தேதி ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this post with your friends