விருதாச்சலம் பரவளூரில் அமமுக பிரமுகர் சகோதரரிடம் 4 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவை சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அமமுக பிரமுகர் காரில் கொண்டுவரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அமமுக பிரமுகர் சகோதரரிடம் இது தொடர்பாக விசாரணை தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.