அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் பால்டால் மற்றும் சந்தன்வாரி நகரில் இரண்டு மருத்துவமனைகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார்.இந்த இரு மருத்துவமனைகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் பக்தர்களுக்கு சிகிச்சையளிக்க நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பேசியுள்ள,ஜம்மு-காஷ்மீர் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி செயலாளர் பூபேந்திர குமார்;, ஒவ்வொரு மருத்துவமனையும் கட்டுவதற்கு நிர்வாகம் 13 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. பால்டால் மற்றும் சந்தன்வாரி ஆகிய இரு இடங்களிலும் 15 நாள்களுக்குள் இந்த மருத்துவமனைகள் கட்டிமுடிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் மருத்துவமனையைக் கட்டி முடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More