ஆந்திரவின், பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி 44 வயதான வெங்கட ராஜேஷ் குமார் . கடந்த 2022 ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அவர் குடும்பத்துடன் குடியேறி உள்ளார்.
அங்குள்ள, அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஜாக்சன்வில்லே பீச்சுக்கு அவரது குடும்பத்தோடு சென்றுள்ளார்.
அப்போது, அவரது மகன் கடலின் நீரோட்டத்தில் சிக்கி கொண்டார். இதனை கவனித்த ராஜேஷ் மகனை காப்பாற்ற சென்ற போது, இரண்டு பேரும் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
உடனடியாக அருகே இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற ஓடி சென்றனர். ஆனால், சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட ராஜேஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர்.
ராஜேஷின் 12 வயது மகன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது மகனின் நிலைமை சீரடைந்து உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.