Mnadu News

அமெரிக்காவில் ஒரு தாராள மங்கை ! கின்னஸ் குழு பாராட்டு!

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்கிறார். அவரின் இந்தக் குறைபாடு எத்தனையோ குழந்தைகளின் பசியைப் போக்கி உள்ளது. ஆம், இந்த பெண் தனது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.  அவரின் இந்த செயலை மனம் திறந்து பாராட்டி உள்ளது கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள் குழு.

அதன்படி, நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது இந்த பெண்ணின் உடல். இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகும்.

2014 ஆம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். 2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து வருகிறார். 

Share this post with your friends