Mnadu News

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! சிலர் பலி! விமானங்கள் ரத்து! மக்கள் கடும் அவதி!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்:
அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்படும் கடும் பனப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக பல்வேறு வகையான விபத்துக்கள் நிகழ்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று ஆஸ்டின்,டல்லாஸ் பகுதிகளில் இருவர் உயிர் இழந்து உள்ளனர்.

விமான சேவை ரத்து:
அதே போல, டல்லாஸ் நகரில் போர்ட் ஒர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் விமானங்களில் சிறு தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டது.

பள்ளிகள் மூடல்:
டெக்சாஸில் பனியின் தாக்கம் காரணமாக 7 ஆயிரம் இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதோடு, 1 லட்சம் மாணவர்கள் படிக்க கூடிய மெம்பிஸ் ஷெல்பை கவுன்டி பள்ளிகளில் இன்று வகுப்புகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை மையம் தகவல்:
இந்த பனி புயலானது, டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ் மற்றும் டென்னசி மாகாணங்களில் இன்றும் தாக்கம் ஏற்படுத்த கூடும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மைய நிபுணர் மார்க் செனார்டு கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends