Mnadu News

அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ! ஜோ பைடன் நேரில் சென்று ஆய்வு!

அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுவுக்கு  உலக அளவில் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக வருகை புரிவர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்தநிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. பல ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

இதில் வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. தீ விபத்தால் நேர்ந்த சேத மதிப்பு பல பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. சுமார் 100 கக்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீட்பு பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் இருந்து ராணுவம் களம் இறங்கியது. இந்தநிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்லவுள்ளார்.

இந்த நிலையில் கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவி உள்ளதால் அவசர நிலையை பிரகடனப்படுத்தி மீட்புப்பணியில் மீட்பு பணிவீரர்களை களம் இறக்கியுள்ளது.

Share this post with your friends