Mnadu News

அமெரிக்க அதிபர் பைடன்-ஜெலன்ஸ்கி பேச்சு: வெள்ளை மாளிகை தகவல்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.அதையடுத்து ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இந்த நிலையில்,பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அரசு மற்றும் பிரிகோஸின் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.அதையடுத்து,வாக்னர் ஆயுதக் குழு அமைதியானதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொபைல் போனில்பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.,அப்போது, ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்தும், உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More