Mnadu News

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற வேண்டி எம்.பி.,க்கள் கடிதம்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் இந்த பயணம் மூலம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கமான உறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.இந்நிலையில், பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்திக்கு ரோ கண்ணா மற்றும் மிச்சல் வால்ட்ஜ் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில்,அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடாளுமன்றம் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடியை அழைப்பது குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்

Share this post with your friends