Mnadu News

அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது வெந்து தணிந்தது காடு!

வேல்ஸ் கல்வி குழுமம் ஒரு படத்தை தயாரிக்க போகிறது என்றால் அது பிளாக் பஸ்டர் ஹிட் அடையும் என்பது உறுதி. கோமாளி, மூக்குத்தி அம்மன், எல் கே ஜி ஆகிய படங்களின் பிரம்மாண்ட வெற்றி இவர்களை மேலும் மேலும் இன்னும் பெரிய படங்கள் தயாரிக்க வைத்துள்ளது.

அப்படி, சிம்பு கெளதம் மேனன் ரஹ்மான் இணைந்த மூன்றாவது படம் தான்
“வெந்து தணிந்தது காடு”. ஏற்கனவே, இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியை பதிவு செய்தது அதில் இந்த படமும் இடம் பிடித்து உள்ளது.

வெந்து தணிந்தது காடு படம் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை வாரிக் கொடுத்ததால் இஷரி கணேஷ் சிம்புவுக்கு ஒரு விலை உயர்ந்த காரும், கௌதம்முக்கு ஒரு புல்லட்டும், கூல் சுரேஷுக்கு ஆப்பிள் ஃபோன் ஐயும் பரிசாக கொடுத்து ஆச்சரிய படுத்தினார்.

இந்நிலையில், இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் பல கோடிகளுக்கு விற்கப்பட்டு, அதில் இன்று வெளியாகி உள்ளது. அதே போல வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

Share this post with your friends