அம்பத்தூர், சிவானந்தா நகர் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையிலான போலீசார் அந்த மசாஜ் சென்டருக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது, அண்ணனூர் செந்தில் நகரை சேர்ந்த பிரபல பெண் பாலியல் புரோக்கர் 23 வயதான காயத்ரி மற்றும் அவரது கூட்டாளியான சென்னை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதான ராஜேஷ், விக்னேஷ் ஆகியோர் தங்களது மசாஜ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை ஒன்று இணைத்து தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து, இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
மூவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதில் மீட்கப்பட்ட மூன்று பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.