அமெரிக்க அதிபர் பைடன் அரசு முறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டினுடன் அங்குள்ள கார்லிங்போர்ட் கோட்டைக்கு ஜோ பைடன் சென்றார். அப்போது அங்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நின்று ஜோ பைடனுக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More