பான் இந்தியா படங்கள் இவர் இல்லாமல் இல்லை என சொல்லும் அளவுக்கு வளர்ந்து உள்ளார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்து தொடர்ந்து பல பான் இந்தியா படங்களில் நடித்து கொடிகட்டி வருகிறார்.
ஆனால், அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஆனாலும், இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் “ஆதி புருஷ்” படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ம் தேதியன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 12ம் தேதி இப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.