Mnadu News

அரசின் கொள்கையால் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: பிரதமர் மோடி உரை.

டெல்லி பல்கலைக்கழத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.பிறகு நடந்த விழாவில், மாணவர்கள் மத்தியில் பேசியுள்ள பிரதமர் மோடி,இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75வது கொண்டாடும் நேரத்தில், இப்பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. மாணவர்களை போல், நானும் இங்கு மெட்ரோ ரயிலில் தான் வந்தேன்.100 ஆண்டு அடிமைத்தனமானது, இந்தியாவின் கல்வி முறையை அழித்ததுடன், வளர்ச்சியையும் பாதித்தது. தற்போது, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. கல்வித்துறையில், அரசின் கொள்கைகள் காரணமாக, இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends