அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளா அறிக்கையில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை அரசு குறைத்துள்ளது.இது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த விடியா அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.க: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய...
Read More