தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி இல்ல திருமண விழா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை திருவுருவச் சிலை திறப்பு விழா, நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக நாமக்கல் வந்தார்.முதலாவதாக நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அழகுநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து, உணவின் தரத்தை அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என். ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More