Mnadu News

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

தமிழ்நாட்டில் கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து உயர்கல்விக்கு சேருவதற்கு மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8 முதல் 22 ஆம் தேதி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்லூரி முதல்வர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends