Mnadu News

அரபிக் குத்து படைத்த புதிய சாதனை! வீடியோ வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழு!

நடிகர் விஜய் நடனத்தில் ஒரு பாடல் வருகிறது என்றால் அதற்கான வரவேற்பை சொல்லவா வேண்டும். அப்படி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்ற ஆக்க்ஷன் படம் “பீஸ்ட்”.

ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போல தளபதி விஜய் சிவாவை அழைத்து பாராட்டி தள்ளியுள்ளார்.

இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் நடனமாட வைத்தது. தற்போது, உலக அளவில் 300 கோடி யூடியூப் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது பான் வேர்ல்டு பாடலான அரபிக் குத்து. இதை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

லிங்க் : https://youtu.be/BfiQ0XXJJEI

Share this post with your friends