மதுபான கொள்கை முறைகேடு வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலக் கோரி டெல்லியில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வெளியே பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More