Mnadu News

“அரிசி, எண்ணெய், பருப்பு அளவு குறைப்பு”: குமுறும் அம்மா உணவக ஊழியர்கள்.

மளிகைப் பொருட்களின் அளவு குறைப்பு குறித்து பேசியுள்ள அம்மா உணவக பணியாளர்கள்,”ஒரு அம்மா உணவகத்தில் தற்போது எட்டு பேர் என்ற அளவில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கப்பட்டுள்ளது.அதே சமயம், 9 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.அதோடு,உணவகத்துக்கு வழங்கப்படும் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால். பல நேரங்களில் எண்ணெய் இல்லாமல் தான் சப்பாத்தி போட்டு விற்பனை செய்து வருகிறோம். ஏழு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்கு தான் வழங்கப்படுகிறது.இந்த கூழ்நிலையில்,சரசாரி வருவாய் குறைந்தால் அதிகாரிகள் கேள்வி கேட்கின்றனர். போதிய அளவில் வருவாய் கிடைக்காத நேரத்தில், எங்களது சொந்தப் பணத்தை கொடுத்து வருவாயை ஈடுகட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends