பெரியத்திரையுலும், சின்னத்திரையுலும் வெற்றிகரமாக நடித்து அனைவருக்கும் பிடித்த நடிகராக வளம் வரும் மூத்த நடிகர் தான் நடிகர் விஜயகுமார் . இவரது மகன் அருண்விஜய் அவர்களும் நீண்ட காலமாக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி அங்கிகாரம் கிடைக்க நீண்ட நாள் உழைத்துக்கொண்டிருக்கார் . இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக சிறப்பாக நடித்திருந்தார். நடிகர் அருண்விஜய் இப்படத்தின் மூலம் அவருக்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது .அதற்கு பின் இவர் நடித்த ஒவ்வொரு படமும் இவருக்கு வெற்றி தான் . சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் தான் தடம் .இத்திரைப்படம் வசூலிலும் பெரிய வெற்றியை கண்டது . மிக பெரிய வெற்றியை கொடுத்த இந்த படம் அருண்விஜய்க்கு ஒரு திருப்பு முனையாகவும் தமிழ் திரையுலகில் இவருக்கென ஒரு தனி தடம் பதிக்க உதவியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .