நான்கு பற்கள் உடைக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.அதில்,தன்மீது பதியப்பட்ட வழக்கின் விவரங்களை தர கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்து தன்மீது பதியப்பட்ட முழு விவரங்களையும் வழங்க வேண்டும் கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களை கேட்டு அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அருண்குமார் கொடுக்கப்பட்ட மனு மீது குற்றவியல் நீதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார், அவர் மனு நிராகரிக்கப்பட்டதா? இல்லை ஏதேனும் வழக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை குறித்த விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய குற்றவியல் நீதிபதிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More