இசையில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் மிகவும் பிஸி கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பவர் நம்ப ஜி வீ பிரகாஷ் குமார். இசை அமைப்பாளர்கள் நடிகர்களாக புதிய பாதையை தேர்வு செய்யும் போது பலர் சருக்கவும், சிலர் மிளிரவும் செய்வார்கள். அப்படி மிளிர்ந்து வரும் நாயகன் தான் ஜி வி பிரகாஷ் குமார்.
கமர்ஷியலும் சரி, கதை முக்கியத்துவம் கொண்ட படங்களும் சரி, எல்லாவற்றிலும் ஒரு கை பார்த்து வருகிறார். சுமார் 80 படங்களுக்கு மேல் தற்போது வரை நடித்து விட்டார். மேலும், தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு மார்கெட் உருவாகி உள்ளது.
அவர் நடிப்பில் வெளியான பேச்சுலர், செல்ஃபி போன்ற படங்கள் மினிமம் கேரண்டி ஹீரோ என்கிற அந்தஸ்தை ஜி வி க்கு பெற்று தந்துள்ளது. தற்போது, விவேக் இயக்கத்தில் ஜி வி, கெளதம் மேனன் போன்ற பலர் நடிப்பில், சித்து குமார் இசையில் உருவாகி உள்ள மிஸ்ட்ரி திரில்லர் படம் தான் “13”. நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இப்படத்தின் டீஸர் உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.