கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி தீவிரமாக செயலாற்றி வருகிறது. அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பின் நோக்கமே சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சிப்பது தான்.
ராணுவம், பொதுமக்களை குறிவைத்து அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். அப்துல்லா நடீர் அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக செயல்பட்டு வந்தார். அமெரிக்கா மற்றும் சோமாலியா அரசுகள் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த பயங்கரவாதியின் தலைக்கு சன்மானமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் ஜூபா மாகாணம் ஹரம்கா என்ற கிராமத்தில் பிற நட்பு நாடுகளின் படையுடன் இணைந்து சோமாலிய ராணுவம் அதிரடி சோதனை தாக்குதல் நடத்தியது. இந்த சோதனையின் போது பதுங்கி இருந்த அல்ஷபா முக்கிய தலைவன் அப்துல்லாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
