அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில், தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்; வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம். அங்கீகரித்துள்ளது. அதோடு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.அத்துடன், கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More