Mnadu News

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

  • கவர்னரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்
  • உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
  • தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
  • தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
  • சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
  • பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும்.
  • வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
  • பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.
  • குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More