Mnadu News

ஆகஸ்ட் மாதம் 2 முதல் பொறியியல் கலந்தாய்வு.

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், சான்றிதழ்களை பதிவேற்ற ஜூன் 9 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.ரேண்டம் எண் ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்படும், சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை நடைபெறும், தரவரிசைப்பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்படும்.கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்குகிறது, ஆகஸ்ட் 2 முதல் 5 வரை சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 24 வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends