Mnadu News

ஆக்கிரமித்த இடத்தை அமர்த்தியா சென் காலி செய்ய வேண்டும்: பல்கலைக் கழகம் நோட்டீஸ்.

மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதன் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. அதே சாந்தி நிகேதன் பகுதியில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் வாழ்ந்து வரும் வீட்டின் நிலம் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் அவரது தந்தைக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஒட்டிய 5 ஆயிரத்து 662 சதுர அடி நிலமும் அமர்த்தியா சென்னின் பயன்பாட்டில் உள்ளது.இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கக் கோரி விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சார்பில், அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நீங்கள் ஆக்கிரமித்துள்ள 5 ஆயிரத்து 662 சதுர அடி நிலத்தை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல் துறையைக் கொண்டு நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends