Mnadu News

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எடப்படி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு குறைந்து உள்ளது. சென்னையை பொருத்தவரை புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் தண்ணீர் முழுமையாக போய்விட்டது.

இப்போது எங்கும் தண்ணீர் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இன்னும் சென்னை நகருக்குள் தண்ணீர் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம் என்று கூறினார்.

Share this post with your friends