Mnadu News

ஆக்ஷன் கிங் அர்ஜூன் பிறந்த நாள் பரிசாக லியோ டீம் கொடுத்த சர்ப்ரைஸ்!

இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி அமைத்துள்ளனர். விஜய்யுடன், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, அர்ஜூன் தாஸ், திரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளது “லியோ” படக்குழு. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் லியோவுக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம்,முதற்கட்ட சூட்டிங் காஷ்மீர் சென்ற படக்குழு அதற்க்கு முன்பாக, அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து ரசிகர்களை திணற வைத்தது எனலாம். படம் துவங்கும் முன்னமே ரிலீஸ் தேதியை குறித்துவிட்டு தான் இந்த டீம் சூட்டிங் செய்ய துவங்கியது. அதோடு, லியோ படத்தில் யார் யாரெல்லாம் பணிபுரிய உள்ளனர் என்பதை மொத்தமாக அறிவித்த படக்குழு இன்னும் சில முடிச்சுகளை அவிழ்க்காமல் உள்ளது.

பின்னர் காஷ்மீர், சென்னை, திருப்பதி என பரபரப்பாக சூட்டிங் நடந்து வந்த நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முதல் சிங்கிள் பாடலான “நா ரெடி” பாடலை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்தது. அதன் பின்னர், மொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெற்று உள்ளதாக லோகேஷ் கனகராஜ் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார். தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்து வருகிறது.

இரண்டாவது சிங்கிள் எப்போது என கேட்டு வந்த ரசிகர்களுக்கு தற்போதைக்கு ஒன்றுமில்லை என ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது லோகேஷ் கூறி இருந்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கேரக்டர் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு மாஸ் காட்டியது.

இதே போல இப்படத்தில் பணியாற்றிய இன்னொரு நடிகரின் கேரக்டர் அறிமுக வீடியோவை வெளியிட்டு உள்ளது. அது யார் என்றால் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் குறித்த வீடியோ தான் அது. இன்று அவரின் 60 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க லியோ படக்குழு அர்ஜூன் கேரக்டர்  அறிமுகத்தைதின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு உள்ளது. இதில் “ஹரோலட் தாஸ்” ரோலில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார்.

Share this post with your friends