காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் நீலகண்டன் மகள் நீனா(19″). இவர் தாய்லாந்தில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி நடைபெற்றது. சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் உள்பட 20 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் காஞ்சிபுரம் மாணவியான நீனா முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இதேபோன்று காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் உள் அக்சயா கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர் வெங்கடேசன் மகன் சரத்ராஜ்(19). இவரும் ஆசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
,நாட்டிற்கு பெருமை சேர்த்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு பேரையும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ், கிக்பாக்சிங் பயிற்றுநர் அருண் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.