சமீபத்தில் பல நடிகர்களையும் , தயாரிப்பாளர்களை இயக்குனர்களையும் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி . சினிமா துறையில் பெரும் கொடுமைக்கு ஆளாகியவர் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டிக்கு தெலுங்கிலும் தமிழிலும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது .
இனியாவது நமக்கு நல்லது நடக்கும் என்று படங்களிலில் சந்தோசமாக நடிக்கலாம் என நடிக்க ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் மீண்டும் ஒரு திரைப்பட பைனான்சியரால் அவருக்கு ஆபத்து உள்ளதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்று அளித்துள்ளார் அந்த புகாரில் நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன் ரெட்டி டைரிஸ் என்ற படத்திலும் நடித்தும் வருகின்றேன்.
இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்சியர் சுப்ரமணிக்கும் அடிக்கடி சண்டை வந்த நிலையில் ஒருகட்டத்தில் சண்டை முத்திவிட்டது . இந்த சண்டைக்கு நான் தான் காரணம் என்று என்னை அவதூறாக திட்டியும் உடலளவில் காயப்படுத்தியும் வந்தார் மற்றும் அவருக்கு என் மேலும் என் ஆடி கார் மேலும் ஒரு கண் இருப்பதாகவும் இந்த புகாரில் கூறியிருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி .