தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் படம் தான் “பிரின்ஸ்”. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு தமன் இசை அமைகிறார். மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் இதில் உடன் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ பாடல் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. அது வைரலும் ஆனது.
இந்நிலையில், பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள ‘ஜெசிக்கா’ என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல் லிங்க் :
https://youtu.be/AsPOlwMSEX4