Mnadu News

ஆந்திர முதல் அமைச்சர் போஸ்டரை கிழித்த நாய்: கைது செய்ய போலீசில் புகார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்களை அக்கட்சியினர் வீட்டு சுவர்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில விஜயவாடா பகுதியில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட போஸ்டரை ஒரு நாய் கடித்து கிழித்துள்ளது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகியது.அதனைத்தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் இணைந்து அந்த நாய் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்டிக்கரை கிழித்தது மூலம் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை அவமதித்ததாகக் கூறி, அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த நாயை போலீசார் தேடி வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More